இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து வெளியான அறிவிப்பு (செய்திப்பார்வை)
இன்றைய தினம் அனைத்து வலயங்களிலும் 7 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்துண்டிப்பு நேரத்தை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியினுள் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, மேற்குறித்த வலயங்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேபோன்று A, முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 6 மணி வரையான காலப்பகுதியினுள் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, மேற்குறித்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,