தொடரும் தாக்குதல்! ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை (செய்திப் பார்வை)
ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் உக்ரைன் - பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றிருந்தது.
என்ற போதும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் அன்றைய பேச்சுவார்த்தை நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் மீளவும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
எவ்வாறிருப்பினும், தொடர்ந்தும் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் கார்க்கிவ் நகர் மீது ரஷ்யா நேற்று இரண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,