சுயாதீன நிபுணர்களின் உதவிகளை நாடுங்கள்- இலங்கை அரசாங்கத்திடம் கோரும் சட்டத்தரணிகள்!
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை தீர்க்க, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது
இதன் மூலமே நாட்டின் பொருளாதார மற்றும் ஏனைய நடைமுறை நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிதி நெருக்கடிகள்,பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தி வருகின்றன.
பணவீக்கம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, பல சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கையின் தரவரிசைக் குறைப்பு, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டமை, சில வெளிநாட்டு விமான நிறுவனங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமை, மின்சார மற்றும் எரிபொருள் நெருக்கடி பற்றிய எச்சரிக்கைகள் என்பன இன்று நாட்டின் நிலையை பிரதிபலிக்கும் அம்சங்களாக உள்ளன.
இந்தநிலையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கொரோனா தொற்று நோய் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளமையால், அரசாங்கம் அசாதாரண சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நிரந்தர தீர்வு ஒன்றை ஏற்படுத்த, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் உதவியை நாடுமாறு வலியுறுத்தியுள்ளது.






6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
