வவுனியாவில் சோளப் பயிர் செய்கைக்கான விதை பதப்படுத்தும் நிலையம் திறந்து வைப்பு
வவுனியாவில் சோளப் பயிற் செய்கைக்கான விதைப் பதப்படுத்தும் நிலையம் விவசாய அமைச்சர் மகிந்த அபயவீரவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (23.03.2024) இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிற்கு விஜயம் செய்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பூவரசன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் நல்லின சோளப் பயிற்செய்கை நிலங்களை பார்வையிட்டதுடன், பயிற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
விதை உற்பத்தி நிலையம்
அதனைத் தொடர்ந்து, வவுனியா, நெளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட சோளப் பயிற்செய்கைக்கான விதை பதப்படுத்தும் மற்றும் விதை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்ததுடன், அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நிலையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வியாபார நிலையத்தையும் திறந்து வைத்து, வியாபார நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri