நாடாளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு தேவை: சபாநாயகர் தெரிவிப்பு
நாடாளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கூடுதல் பாதுகாப்பு
தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாடாளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்பதே புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நாட்டின் சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என சபாநாயகர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்றில் கூட்டங்களை நடத்தும் போது தற்பொழுது வழங்கப்படும் பாதுகாப்பினை விடவும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகல் உணவு வழங்குவதனை நிறுத்தினால், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வர நேரிடும் எனவும் இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சோற்று பார்சலில் குண்டு வைத்து நாடாளுமன்றிற்கு கொண்டு வரப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri