அச்சுறுத்தல் இல்லாத முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு விரைவில் நீக்கம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத முக்கிய பிரமுகர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு விரைவில் நீக்கிக் கொள்ளப்படவுள்ளது.
தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைசார் உயரதிகாரிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவென ஐயாயிரம் பேரளவிலான பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்கள சேவை
எனினும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் புலன் விசாரணையொன்றை நடத்தி, உண்மையில் அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனரா என்பது குறித்த அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள்.
இதன்படி சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் மீண்டும் பொலிஸ் திணைக்கள சேவைக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam