கொழும்பில் திடீரென தீவிரமடையும் போராட்டம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் (Live)

Colombo Sri Lanka SL Protest
By Mayuri Jan 16, 2023 11:02 AM GMT
Report

கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நோக்கி நகர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நான்காம் இணைப்பு

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்க ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பொலிஸார் தற்போது போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவினை அறிவித்து வருகின்றனர். 

மூன்றாம் இணைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் திரண்டுள்ளனர்.


எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் அங்கு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த போராட்டம் கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து இரகசியமாக போராட்ட இடத்தை மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

கொழும்பில் திடீரென தீவிரமடையும் போராட்டம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் (Live) | Security In Sri Lanka

கொழும்பில் திடீரென தீவிரமடையும் போராட்டம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் (Live) | Security In Sri Lanka

கொழும்பில் திடீரென தீவிரமடையும் போராட்டம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் (Live) | Security In Sri Lanka

கொழும்பில் திடீரென தீவிரமடையும் போராட்டம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் (Live) | Security In Sri Lanka

இரண்டாம் இணைப்பு

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதிக்கு விரைவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

முதலாம் இணைப்பு

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்னும் சற்று நேரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு


இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US