பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு:பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ
ஈரானின் தெஹ்ரான் மெட்ரோ தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
'بر اثر تیراندازی ماموران در ایستگاه مترو شهروندان زیر دست و پا ماندند. #تهران، ۲۴ آبان' #مهسا_امینی pic.twitter.com/OCBkdDBqct
— Vahid Online (@Vahid) November 15, 2022
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெட்ரோ நிலையத்தில் பயணிகள் பலர் தொடருந்துக்காக காத்து கொண்டிருந்துள்ளனர். இதில் போராட்டக்காரர்களும் கலந்திருந்தனர்.
பயணிகள் பலர் காயம்
அப்போது அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் ஹிஜாப் அணியாத பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதனால்,மெட்ரோ நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் தொடர்ந்து “நாங்கள் போராடுவோம்” என்று முழக்கமிட்டுள்ளனர்.
இந்த தள்ளுமுள்ளு காரணமாக பல பயணிகள் காயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
