இலங்கையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூரும் ஆராதனை மற்றும் சமய நிகழ்வுகள் நாளை மறு தினம் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையிலேயே குறித்த தினத்தில் இலங்கையின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் இவ்வாறு பாதுகாப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் முஸ்லிம் அடிப்படைவாத குழுவினர் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 300இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர்.



