சிங்களவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்தமை ராஜபக்ச அரசின் எதேச்சதிகாரம்
ஸ்ரீலங்கா அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை புறந்தள்ளி, சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கையே காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
சிங்களத் தலைவர்களும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் புரிந்துகொள்ளாத வரையில் நாடு முன்னோக்கிப் பயணிப்பது சாத்தியமாகாத விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை காணப்படுவதாகவும், அதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
