நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிரான மனு விசாரணை நாளை!
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் நாளை உயர்நீதிமன்றின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதன்படி, சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இரண்டு அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மார்ச் 03 அன்று, நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு நிதிச் செயலாளருக்கு எதிராக இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
தேர்தல் நோக்கங்களுக்காக 2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் குறித்த நிதியை மஹிந்த சிறிவர்த்தன விடுவிக்காமை நீதிமன்றத்தை
அவமதிக்கும் செயல் என்று தெரிவித்தே அவருக்கு எதிராக மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
