பிரதம நீதியரசருக்கு நேரடியாக எழுதப்பட்ட கடிதம்: அரச தரப்பின் கடுமையான தீர்மானம்
நீதித்துறை செயற்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் அரச அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு அமைச்சக செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
இதற்கமைய அமைச்சக செயலாளர்கள், மாகாணங்களில் உள்ள தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அடுத்த வாரம் இது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
தீர்மானங்கள்
வழமையான விடயங்கள் தொடர்பில் அவர்கள் சட்டமா அதிபருடன் தொடர்பு கொள்ள முடியும், ஆனால் ஏனைய விடயங்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழு உடனான வழக்கமான தொடர்புகள் மேற்கொள்ளப்படக்கூடாது.
நீதித்துறை விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமைச்சின் செயலாளர் ஒருவர் பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம்
எழுதிய சம்பவம் ஒன்றும் இந்த முடிவை எடுப்பதில் முக்கியமாக கவனத்தில்
கொள்ளப்பட்டதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan