ரஷ்யாவிற்கு எதிரான சதி!அமெரிக்கா மற்றும் நேட்டோவிற்கு அதிர்ச்சியளித்துள்ள சம்பவம்
ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விபரங்களை வழங்கும் இரகசிய ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கும், உக்ரைனிய இராணுவத்தை தயார்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கிய ஆவணங்களே தற்போது கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி ஆவணங்கள் வெளியானது
ஆயுத விநியோகம் மற்றும் பிற முக்கிய தகவல்கள் பற்றிய விளக்கப்படங்கள்,விபரங்கள் அடங்கியுள்ள ஆவணங்கள், டுவிட்டர் மற்றும் டெலிகிராம் ஆகிய தளங்களில் பகிரப்பட்டுள்ளாதாகவும், அவற்றில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் அறிக்கைகள் வெளியானது குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம், மேலும் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்து வருகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க மற்றும் நேட்டோவின் இந்த திட்டங்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.