கோட்டாபய மகிந்த அரசுக்கு எதிராக இரகசிய திட்டம்! வகுக்கப்படும் வியூகம்: செய்திகளின் தொகுப்பு(Videos)
ஆளும் தரப்பில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு கோட்டாபய, மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திட்டம் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பயணிக்கத் தயார் என்று அறிவித்துள்ளது, இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஜே.வி.பி. இந்த சந்தர்ப்பத்திலேயே பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள சில நிலவரங்களுக்கு அவர்களும் பொறுப்பு கூற வேண்டும். 2005 இல் மகிந்த ராஜபக்ச ஆட்சியமைப்பதற்கு முன்னின்று செயற்பட்டது யார்? அன்று ஜே.வி.பி. ஆதரவளித்திருக்காவிட்டால் மகிந்த ராஜபக்ச அரச அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan