மிஹிந்தலையில் காட்டுக்குள் வெடித்த இரகசிய துப்பாக்கி - ஒருவர் பலி
மிஹிந்தலை பிரதேசத்தில் காட்டுக்குள் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கில் இருந்து பாய்ந்த ரவை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(24.10.2026) மிஹிந்தலை - அசோகபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அசோகபுர பிரதேசத்தில் வசித்து வந்த திருமணமாகாத 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒருவர் கைது
வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோதமாக கட்டுத்துவக்கு பொருத்திய குற்றச்சாட்டின் பேரில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம்(25) குறித்த நபரை அநுராதபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை தமிழ் அகதிகளை மீளக் கொண்டு வருவதாக கனடாவிலுள்ள அமைப்புகள் பணம் வசூலிப்பு..! ஈரோஸ் தலைவர் அதிருப்தி
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri