சிரியா தொடர்பான ஈரானின் இலக்கு! அம்பலமாகிய இரகசிய ஆவணம்
சிரியாவின் உள்நாட்டுப்போரின் போது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஈரான் வகுத்த இரகசிய திட்டங்கள் அடங்கிய ஆவணங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவை மீண்டும் கட்டியெழுப்புவதில் பில்லியன் கணக்கான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்கா தனது உலகளாவிய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது போலவே, ஈரானும் மத்திய கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது பரம எதிரியாகக் கருதும் அமெரிக்காவை போல இந்த திட்டத்தை முன்னடுக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.
இலட்சியத் திட்டம்
ஈரானின் இந்த இலட்சியத் திட்டத்தை, அந்நாட்டில் இருந்து பெறப்பட்ட 33 பக்க அதிகாரப்பூர்வ ஆய்வு அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளதாக குறித்த ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த இலட்சியத் திட்டம், போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான அமெரிக்காவின் வரைபடமான "தி மார்ஷல் திட்டத்தை"ப் பற்றிய பல குறிப்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 2022 திகதியிடப்பட்ட இந்த ஆவணம், சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய பொருளாதாரக் கொள்கைப் பிரிவால் எழுதப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பரில் ஈரானின் டமாஸ்கஸ் தூதரக கட்டிடமானது கொள்ளையடிக்கப்பட்டபோது அங்கும் தலைநகரைச் சுற்றியுள்ள பிற இடங்களிலும் கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான ஆவணங்களில், கடிதங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஈரான் நாட்டின் நீண்டகால உள்நாட்டுப் போரின் போது ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தைக் காப்பாற்ற செலவழித்த பில்லியன்களை எவ்வாறு திரும்பப் பெற திட்டமிட்டது என்பதை வெளிக்காட்டும் ஆவணங்கள் இதில் திரட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சிரியா-மூலோபாய ஆவணம்
குறித்த சிரியா - மூலோபாய ஆவணம் ஒரு பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புவதையும், ஈரானின் நட்பு நாடொன்றின் மீது செல்வாக்கை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
ஈரானுக்கு விரோதமான கிளர்ச்சியாளர்கள் டிசம்பரில் அசாத்தை வீழ்த்தியபோது இந்த ஏகாதிபத்திய நம்பிக்கைகள் நசுக்கப்பட்டன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அசாத் ரஷ்யாவிற்கு தப்பி ஓடினார். ஈரானின் துணை இராணுவத்தினர், இராஜதந்திரிகள் மற்றும் நிறுவனங்கள் அவசரமாக வெளியேறினர்.

அசாத்தின் விலகலை கொண்டாடும் சிரியர்களால் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம் சூறையாடப்பட்டது.
ஈரானிய முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் ஆவணங்களால் கட்டிடம் சிதறிக்கிடந்தது.
சிரியாவை இலக்குவைத்த ஈரானிய முதலீடுகளில், பொறியியல் நிறுவனத்தால் கடலோர லடாகியாவில் கட்டப்பட்டு வரும் 411 யூரோ மில்லியன் மின் உற்பத்தி நிலையமும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam