யாழில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்! அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை (Video)
யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இன்று யாழ். நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன்போது, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டது.
நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.






ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri