மன்னாரில் வீடொன்றிலிருந்து உயிருடன் கடல் ஆமை மீட்பு - ஒருவர் கைது
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூன்றாம் பிட்டி கிராமப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோகிராமிற்கும் அதிக எடையுடன் கடல் ஆமை ஒன்றை இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிஸார் குறித்த கடல் ஆமையினை இன்று காலை உயிருடன் மீட்டுள்ளனர்.
இதன்போது குறித்த கடல் ஆமையினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மூன்றாம் பிட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட குறித்த கடல் ஆமை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆமையினை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam