மட்டக்களப்பில் பாரியளவில் கடல் கொந்தளிப்பு : மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன்காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாதீவு புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூநொச்சிமுனை நாவலடி புன்னக்குடா உட்பட பல கரையோர பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடற்றொழிலாளர்கள் தமது படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர். மீன் விற்பனை நிலையங்கள் மீன் வாடிகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.





தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
