மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பலத்த காற்றும் வீசி வருகின்றது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லையெனவும்,இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக புதிய நாவலடி, காத்தான்குடி, சவுக்கடி, வாகரை உட்பட்ட பல மீன்பிடி பிரதேசங்களில் இக்கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறும்,தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் மீனவர்கள் தங்களது படகுகளையும், மீன்பிடி கலன்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
