பிரபல தொலைக்காட்சி தொடர் பாணியில் போதை வியாபாரம்: இந்தியாவில் அறிவியல் ஆசிரியர்கள் கைது
இந்தியாவின் ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரித்த குற்றச்சாட்டில் இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சுமார் 15 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் போதைப்பொருளை தயாரித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங் பேட்
குறித்த ஆசிரியர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இந்த போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டரை மாதங்களாக விடுமுறையில் இருந்து அவர்கள் போதைப்பொருட்களை தயாரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான பிரேக்கிங் பேட்(Breaking Bad) பாணியில் அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

குறித்த தொடரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி பயின்ற மாணவன் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் தயாரிப்பது போன்று கதை நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam