பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! விசாரணையில் வெளியான உண்மைகள்
கம்பளை - தவுலகல பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் இன்று(13) காலை மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவியும், கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரையும் இன்று காலை அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவியும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அம்பாறை பேருந்து நிலையத்தில், பேருந்து ஒன்றிற்குள் இருக்கும் போது இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
மாணவியைக் கடத்திய பின்னர், சந்தேக நபர் அவரை அம்பாறை பகுதிக்கு அழைத்துச் சென்று, பல இடங்களில் மூன்று முச்சக்கர வண்டிகளில் மாற்றி மாற்றி அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை, சம்பந்தப்பட்ட சந்தேக நபர் மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி, அம்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து கண்டிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி, அமைதியாக இருக்கும்படி மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளியான காணொளி..
கடந்த சனிக்கிழமை(11) மதியம் பாடசாலை சென்று விட்டு இரு மாணவிகள் திரும்பி வந்துக் கொண்டிருக்கும் போது அவ்வழியே வந்த கறுப்பு வான் ஒன்றில் வந்தவர்கள் இரண்டு மாணவிகளுள் ஒருவரை கடத்திச் சென்றனர்.
அந்த பகுதியின் ஊடாக பயணித்த மற்றுமொருவர் இதனை அவதானித்து உடனடியாக குறித்த மாணவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், காப்பாற்றச் சென்ற நபரையும் அதே வாகனத்தில் கடத்திச் சென்றமை காணொளியின் ஊடாக தெரியவந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவியை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வான் பொலன்னறுவையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், வானின் சாரதி கம்பளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனவும், இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றதாகவும், கப்பம் பெற முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் விளைவாக கடத்தியதாகக் கூறப்படும் மாணவியும், கடத்தலில் ஈடுபட்ட குறித்த சந்கேதநபரும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கல்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு கடத்தப்பட்ட மாணவி அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
காப்பாற்றச் சென்ற நபர் மீது தாக்குதல்
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த மாணவி, சந்தேகநபருடன் சென்றுள்ளமை குறித்த விடுதியின் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த மாணவி எவ்வித எதிர்ப்பும் காட்டாது வானில் பயணித்ததாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்மீது கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாணவி கடத்தப்படும் சமயம் காப்பாற்றச் சென்ற நபரை இடையில் வைத்து வானில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், வானில் வைத்து கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் காப்பாற்றச் சென்ற நபரின் கையை கடித்ததாகவும், இதனால் கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இடையில் வானில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், மாணவியை காப்பாற்றும் முயற்சியின் போது தனது கண்ணுக்கு கீழ் காயம் எற்பட்டதாகவும் மாணவியை காப்பாற்றச் சென்ற நபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam