உயரமான மரத்தின் மீதேறி தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன்!
அட்டாளைச்சேனை பகுதியில் இளைஞரொருவர் உயரமான மரத்தின் மேல் ஏறி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் எரிப்பொருள் நிறப்பும் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பெரிய மரம் ஒன்றின் மேல் ஏறி இளைஞரொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அக்கரைப்பற்று மாநகர சபை தீயனைப்பு பிரிவின் உதவியுடன் இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
