வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் (Photos)
வவுனியா உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை ஆரம்பமாகி இன்று (25) நடைபெற்றுக்கொண்டிருந்த போது காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற குறித்த பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர், பாடசாலை வளாகத்தில் நின்ற ஆசிரியர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மற்றைய ஆசிரியர்கள் இதனை அவதானித்ததும் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சம்பவத்தையடுத்து பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியமையினால் பாடசாலை வளாகத்தில் பதட்டமான நிலமை நிலவி வந்ததுடன் பொலிஸார் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri