பாடசாலை வான்களின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பாடசாலை போக்குவரத்து வான்களின் கட்டணம் குறைக்கப்படாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து வாகன சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து வாகன சங்கத்தின் தலைவர் எல். மால். ஸ்ரீ. டி. சில்வா மேலும் கூறுகையில்,
“கடந்த காலங்களில் எரிபொருள் விலை பதினைந்து ரூபாய் அதிகரிக்கப்பட்டாலும், நாம் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. இன்றை அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டு வருகிறது.
தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசன பட்டி அணிய வேண்டும் என கோருகிறது. எமது சில வான்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன. ஆனால் ஆசனப்பட்டிகள் பொருத்துவது முடியாத காரியமாகும்.
அதன் விலைகள் மிக அதிகமாகும். நாங்களும் பெற்றோர்களுக்கு நிவாரணம் வழங்கத்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் எம்மால் முடியாமல் தான் இருக்கிறது.
இரு நோக்கு பாவனை வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். இவ்வாறான சட்டங்களால் எமக்கு இந்த தொழிலை முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
