இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு
வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
புதிய திகதிகள் அறிவிப்பு
அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த கணிதப் பாடத்தின் வினாத்தாளும், பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது.
இதன் காரணமாக மேல்மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த 10 ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இதற்கமைய, கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான முதலாம் பாகத்திற்கான பரீட்சை நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
