கண்டியில் பிரபல பாடசாலை மாணவர்கள் கஞ்சாவுடன் கைது
கண்டியில் உள்ள மூன்று முன்னணி பாடசாலைகளின் மூன்று மாணவர்கள் கஞ்சாவுடன் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூங்காவில் கஞ்சாவை புகைக்க தயாரான போது கைது செய்த பொலிஸார்
இந்த மாணவர்கள் பகுதி நேர தனியார் வகுப்புகளில் கலந்துக்கொள்வதற்காக சென்று, கண்டி ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவில் கஞ்சாவை புகைக்க தயாராகி கொண்டிருந்த போது பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு நகரில் சுற்றித்திரியும் மாணவர்கள்
அப்போது மாணவர்களிடம் இருந்து 3 ஆயிரம் மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பகுதி நேர தனியார் வகுப்புகளில் கற்பதற்காக பெற்றோர் வழங்கும் கட்டணங்களை பயன்படுத்தி, போதைப் பொருளை கொள்வனவு செய்யும் மாணவர்கள், வகுப்புக்கு செல்லாது போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு, நகரில் சுற்றித் திரிவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே மாணவர்கள் கூடும் இடமாக கருதப்படும் ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பாடசாலைகளில் உயர் தரம் படிக்கும் மாணவர்கள் அவர்கள் கற்கும் பாடசாலைகளில் கீழ் வகுப்பு மாணவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு இதற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
