பிரபல பாடசாலையில் சகமாணவர்களின் தாக்குதலினால் சுயநினைவை இழந்த மாணவன்
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் சேர்க்கப்பட்ட சக மாணவனை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் மூன்று மாணவர்களும் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவன் வழங்கிய வாக்குமூலம்
குறித்த பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவனை ஏனைய மாணவர்கள் துன்புறுத்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அவர் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
