பெற்றோரின் எச்சரிக்கையை தாங்க முடியாமல் பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு
களுத்துறையில் பெற்றோரின் எச்சரிக்கையை தாங்க முடியாமல், 13 வயது பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சிறுவன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிபென்ன, ஹொராவல பகுதியைச் சேர்ந்த, மத்துகம பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோரின் எச்சரிக்கை
குறித்த மாணவன் தலைமுடியை வெட்டுவது குறித்து பெற்றோரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், மனமுடைந்த மாணவர் கடிதம் எழுதி வைத்த நிலையில் உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று முன்தினம் களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam