பாடசாலை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை ஒன்றின் தரம் 12 மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது வழியில் இந்த தகராறு இடம்பெற்றுள்ளது.
இந்த தோதலில் மாணவர் ஒருவர் தன்னிடமிருந்த காகிதம் வெட்டும் கட்டர் மூலம் மற்றுமொரு மாணவனின் கையை அறுத்துள்ள நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு சென்று 7 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவர் பிணையில் விடுவிப்பு
ஹிக்கடுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட வேவல கொலனியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காகிதம் வெட்டும் கட்டரை பயன்படுத்தி வெட்டியதாகக் கூறப்படும் மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 9 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
