பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சின் அறிவிப்பு
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (13) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், முதலாம் தவணையின் அடுத்த கட்டங்கள் ஆரம்பமாகும் திகதிகள் குறித்து கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
அந்த வகையில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகள் 2026 மார்ச் 03 அன்று மீண்டும் ஆரம்பமாகும்.
மேலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் 2026 மார்ச் 23 முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் தகவல்
இதேவேளை, 2025ஆம் ஆண்டிற்கான (2026 இல் நடத்தப்படும்) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகி வியாழக்கிழமை (26) நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri