கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வருடத்தில், பல்வேறு காரணங்களால் வழமையான பணியிடங்களை விட்டு வேறு சில பாடசாலைகளில் டிசம்பர் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி நியமனத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியாண்டு நிறைவடையும் வரையில், குறிப்பாக மார்ச் 24 ஆம் திகதி வரை குறித்த ஆசிரியர்களின் பணி நியமனம் நீடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கடிதம் வழங்கப்படமாட்டாது
மேலும், எதிர்காலத்தில் இடமாற்ற சபைகள் மூலம் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் மீண்டும் கடிதம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதம் அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
