பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணை சுற்றறிக்கை
அதன்படி, 2025.12.09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையிலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையிலும் விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சகம் கூறுகிறது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை 2025 டிசம்பர் 22 திங்கள் கிழமையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையும் முடிக்க ல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
2025.12.27 முதல் 2026.01.04 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை 11.09.2025 திகதியிட்ட பாடசாலை தவணை அட்டவணை - 2026 சுற்றறிக்கை எண். 30/2025 இன் படி செயல்படும் என அறிவித்துள்ளது.
மேலும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள பாடசாலை பரீட்சைகளின் திகதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சகம் மேலும் அறிவித்துள்ளது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri