பாடசாலை மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்! ஆசிரியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில்,விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவும், மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள்
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு புதிய வழக்குகள் 30.06.2022 நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பொலிஸாரினால் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு, சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தொடரப்பட்ட B/686/22 வழக்கு ஆகியன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயன் முன்னிலையாகிய நிலையில்,வழக்கு விசாரணைகளின் பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri