ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை காரணமாக பாடசாலை மூடல்! (Photos)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பாடசாலை அதிபர் இடமாற்றத்தினை இரத்து செய்யாத காரணத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் பாடசாலை காணி சுவீகரிப்பு மற்றும் அதிபர் இடமாற்றத்தினை கண்டித்து பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒன்றிணைந்து கொட்டும் மழை என்றும் பாராமல் பாடசாலையின் வாயில் கதவினை பூட்டி வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (3) ஈடுப்பட்டிருந்தனர்.
இந் நடவடிக்கையினால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், இன்று (4) பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை காரணமாக பாடசாலைக்கு சமூகம் தராதர காரணத்தினால் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை மூடி காணப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற ஆர்பாட்டத்திற்கு வருகை தந்த வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.உமர்மௌலானா கருத்து தெரிவிக்கையில்,
அதிபரின் இடமாற்றமானது கல்வி அமைச்சின் செயலாரினால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். அவர் தற்போது எமது அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளரினால் அதிபரின் இடமாற்றம் தொடர்பாக இரத்துச் செய்யப்பட்ட கடிதம் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் மீண்டும் குறித்த பாடசாலைக்கு அவர் இணைக்கப்படுவார் என்றும், குறித்த கட்டடமானது பல்கலைக் கழகம் சார்ந்த மட்டத்தில் கணிணி வசதிகளை கொண்டமைந்ததாகவும், பெற்றோர்கள் இப்பிரதேசத்தில் இதன் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றமையினால் பிரிதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக தமது கருத்தினை அமைச்சின் செயலாளருக்கு தெரிவிப்பதாகவும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,






தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
