போக்குவரத்து வசதி இன்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு (Photos)
வவுனியாவின் சில பிரதேசங்களில் போக்குவரத்து வசதி இன்மையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்திற்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமங்களுக்கான போக்குவரத்து சேவை இன்றையதினம் (12.06.2023) மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான திலீபன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து வசதி இன்மை
வவுனியா - சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலன்குளம், கந்தன்குளம், புலவநாவூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல சீரான போக்குவரத்து வசதி இன்மையால் சரியான நேரத்திற்கு பாடசாலை செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரச்சினையை பூவரசங்கும் பாடசாலை அதிபரும், குறித்த கிராம மக்களும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனிடம் தெரிவித்ததையடுத்து போக்குவரத்திற்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri