தண்டவாளத்தில் ஹேண்ட்ஸ்ஃப்ரீயுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி
அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கண்டேகொடை தொடருந்து நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த மாணவன், தனது கையடக்க தொலைபேசியில் ஹேண்ட்ஸ்ஃப்ரீயை பயன்படுத்திக் கொண்டு தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, பின்னால் வந்த தொடருந்தின் சத்தம் கேட்காத நிலையில் தொடருந்து அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
