வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
கென்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் போது சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த மாணவனின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan