இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது இப்படித்தான்!! காசா கட்டமைத்த மர்ம உலகம்! (Video)
காசாவில் பலஸ்தீன மக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகம் செயற்பட்டுக் கொண்டிருக்க, காசாவின் நிலப்பரப்புக்கு கீழே - ஏராளமான நிலக்கீழ் தளங்களில் ஹமாஸ் அமைப்பு ஒரு ராஜ்யத்தையே நடாத்திக் கொண்டிருக்கின்றது.
நவீன முறையில், அனைத்து வசதிகளுடன், பல நூறு மைல்கள் தூரத்திற்கு காகாசாவில் கொங்கீறீட்டினாலான நிலக்கீழ் சுரங்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
உணவுக் களஞ்சியங்கள், மின்சார வசதிகள், வென்டிலேட்டர்ஸ், படுக்கை வசதிகள், அடுப்பறைகள், கழிவறைகள் என்று ஆயிரக்கணக்கான போராளிகள் பல நாட்கள் மறைந்திருந்து செயற்படக்கூடியதான சுரங்கங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறைந்தது 300 k.m நீளத்திற்கு காசாவினுள் சுற்றிச் சுற்றி சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சில சுரங்கப் பாதைகள் இஸ்ரேல் வரையும், சில சுரங்கப்பாதைகள் எகிப்து வரையும் நீண்டு காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
காசா மீது தாக்குதல் நடாத்துவதற்கு என்று நுழைய இருக்கின்ற இஸ்ரேலியப் படைகளுக்கு பாரிய சவாலாக இருக்கப்போகின்றது என்று கூறப்படுகின்ற ஹமாசின் நவீன நிலக்கீழ் சுரங்கங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri