எனது கணவனின் உயிரை மீட்டுத் தாருங்கள்! ஆதரவற்று தவிக்கும் குடும்பத்தின் சோக கதை
ஆணின் தலைமைத்துவம் இன்றிய குடும்பங்கள் எண்ணவோ இன்றும் பல துயரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அதுபோன்று யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் வாழும் லோகராஜா கஜன் நிலானி குடும்பத்தினருக்கு மாத்திரம் வறுமை ஒரு விதி விளக்கல்ல.
இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த நிலையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் சுத்திகரிக்க வேண்டிய பெரும் போராட்டத்தின் மத்தியில் இரு பிள்ளைகளுடன் இவர் வாழ்ந்து வருகின்றார்.
வீடு இல்லை, மருத்துவச் செலவிற்கு போதிய பணம் இல்லை, பிள்ளைகளின் கல்வியினை முன்னேற்ற வசதியில்லை. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
