உலக கிண்ண போட்டி வெற்றியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்த சவூதி
உலக கிண்ண போட்டித் தொடரின் முதல் சுற்று போட்டியில் வெற்றியீட்டியதனை கொண்டாடுவதற்காக சவூதி அரேபியாவில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி வெற்றி
நேற்றைய தினம் பலம்பொருந்திய ஆர்ஜன்டீனா அணியை 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவூதி வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் அந்நாட்டு மன்னர், நாட்டில் இன்றைய தினம் பொதுவிடுமுறை அறிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் விடுமுறை?
அரசாங்க, தனியார் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோருக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 1990ம் ஆண்டில் ஆர்ஜன்டீனாவை கமரூன் வீழ்த்திய போது அந்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.