இனப்பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் - சத்தியலிங்கம் எம்.பி
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு தரப்பாக பயணிக்கவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கின்றது.
கட்சியின் நிலைப்பாடு
அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படும் போது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.
அத்துடன், தமிழ் மக்களின் நிலைப்பாடு இது தான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க வேண்டும். இது தான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |