போதைப் பொருள் வர்த்தகரிடம் செய்மதி தொலைபேசி
கொதட்டுவை பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூன்று செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொதட்டுவை, படஹேனலந்த வீதியைச் சேர்ந்த நபரொருவர் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபரின் வீட்டில் நேற்று பொலிசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
பணம் மற்றும் போதைப்பெருளும் மீட்பு

சந்தேக நபரிடமிருந்து 76கிராம் 330 மில்லி கிராம் எடை கொண்ட போதைப் பொருளுடன் மூன்று செய்மதித் தொலைபேசிகள், ஏழு இலட்சத்தி எண்பத்தி இரண்டாயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தைப் பெறுமதி பத்து இலட்சம் ரூபா என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நந்தகுமார் சிவானந்தன் அல்லது சிவா என்றழைக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri