விடுதலைப் புலிகள் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவித்துள்ள விடயம் - செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், ஜே.வி.பி. கலவரத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி, நிலம், நிர்வாக கட்டமைப்பு காணப்பட்டது.
இலங்கை இராணுவத்தை எந்நேரமும் தாக்கும் கடல் மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தும் வளம் காணப்பட்டது.
ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு என்ற நிலையில் வைத்துக் கொண்டே அரசாங்கம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர தலைமை தாங்கிய அரசியல்வாதிகள், இராணுவத்தளபதிகள் உட்பட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.
இது முற்றிலும் அநீதியானது. புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காக ஒரு சில நாடுகள் ஐ.நா சபையின் சாசனத்தையும் அடிப்படை கொள்கைகளையும் மீறியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri