சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு: வடக்கு-கிழக்கை எச்சரிக்கும் சரத் - செய்திகளின் தொகுப்பு
சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் அந்த பொறுமையைத் தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கங்கள் குடியேறுகின்றன. இவ்விடயத்தில் சிங்களவர்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ஆராய வேண்டும்.
அத்துடன், இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்பதற்கு வரலாற்று ரீதியிலான சான்றுகளாகப் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த மதத்துக்கும்,பௌத்த புராதன தனித்துவத்துக்கும் எதிராகத் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
