“தனிநாடு கோரும் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள்! இலங்கையில் தமிழர் தாயகம் இல்லை” சரத் ஆத்திரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் என்று போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட பின்னர் என்ன நோக்கத்தோடு வடக்கிலும், கிழக்கிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது என வினவியுள்ளார்.
அத்துடன், தனிநாட்டைக் கோரும் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினரை அவமதிக்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பியவாறும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி புறப்படும் தமழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார் என சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.