எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அமைச்சர் சரத் வீரசேகரவே பொறுப்பேற்க வேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக நாடாளுமன்றத்திற்கு இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற அடிப்படையில் தனக்கு அரசாங்கத்தால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், தாம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இப்போது தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அமைச்சர் சரத் வீரசேகரவை பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடக்கில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டமை காரணமாகவே தமது பாதுகாப்பை நீக்க வீரசேகர உத்தரவிட்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் சரத் வீரசேகர, நீதிமன்ற உத்தரவை மீறியமைக் காரணமாகவே சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக மன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் நீதிமன்ற உத்தரவை மீறியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் இதுவரை அறிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.




