ரிஷாட்டின் கைது தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்
சபாநாயகரிடமிருந்து தேவையான ஒப்புதலைப் பெற்றுக்கொண்டன பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரகேகர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர், குற்றப் புலனாய்வு பிரிவினர் சபாநாயகரிடமிருந்து தேவையான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக சம்பந்தப்பட்ட நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவார்கள் என” என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன கருத்து வெளியிடுகையில்“ ரிஷாத் பதியுடீன் மற்றும் ரியாஸ் பதியுதீன் ஆகியோரை கைது செய்வது பகுப்பாய்வு தரவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது என்று கூறினார்.
இந்நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.