16 வருடங்கள் கழித்து சரத்பொன்சேகா வெளியிட்ட காணொளி! எழுந்துள்ள சந்தேகம்
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும் கூறி இருந்தனர்.
இந்தநிலையில், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நேற்று(18.2.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விடயத்தை சற்று உற்றுநோக்கும்போது இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்று இருக்கின்றது என்பதனை சொல்ல எத்தனிக்கின்றாரா என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
அத்தோடு, ராஜபக்ச தரப்பினர் உட்பட பல பேர் இணைந்து இந்த யுத்தத்தையே வேறு திசைக்கு மாற்றும் ஒரு திட்டத்தில் இருந்ததாகவும் நேற்றையதினம் பொன்சேகா குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில், யுத்தத்திலிருந்து தம்மை தனிமைப்படுத்தி விட்டு ராஜபக்சக்கள் ஒ்ன்று சேர்ந்து செயற்பட்டதாக பொன்சேகா கூறி வருகின்றார்.
இந்த நிலையில், சரத்பொன்சேகா நேற்றையதினம் ஊடக சந்திப்பில் காண்பித்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் news insight நிகழ்ச்சி...
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam