விடுதலைப் புலிகளின் தலைவரை மரியாதையாக அழைத்த மகிந்த : பொன்சேகா தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை 'மஹதயா'(Sir) என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனையில், யுத்தம் எனது தீர்மானம் இல்லை என மகிந்த குறிப்பிட்டிருந்ததாக சரத் பொன்சேகா சுட்டிக்காயுள்ளார்.
மரியாதையாக அழைத்த மகிந்த
நான், பிரபாகரன் அவர்களை('மஹதயா') நேரடியாக சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவேன் என மகிந்த கூறியிருந்ததாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
உடனே, சரத் பொன்சேகாவிடம் கேள்வி கேட்ட தனியார் ஊடகவியலாளர், 'மஹதயா' என அழைத்தாரா என கேள்வியெழுப்பினார். அதற்கு, ஆம் என சரத் பொன்சேகா பதிலளித்தார்.
மஹதயா என்பது சிங்களத்தில் ஒருவரை மரியாதையாக அழைக்கும் சொல்லாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
